
புத்தளம் சிறாம்பியடி பிரதேசத்தில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் கொழும்பு – அனுராதபுரம் வீதி போக்குவரத்து முடங்கியுள்ளது.மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
இதேவேளை யாழ்ப்பாண ஏ 9 வீதி ஓமந்தையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கான மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.