
அஹதிய்யா தின வருடாந்தப் பரிசளிப்பு விழா – 20252024ஆம் ஆண்டு இடம்பெற்ற அஹதிய்யா தின போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு விழாவும், மூன்று தவணைகளிலும் அஹதிய்யாப் பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்றுக் கொண்ட மாணவர்களை சின்னம் வழங்கி கௌரவிக்கும் விழாவும், தொடர்ந்தேர்;ச்சியாக எல்லா வாரங்களிலும் சீரான முறையில் அஹதிய்யாப் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களை கௌரவித்து சின்னம் அணிவிக்கும் விழாவும் எதிர்வரும் 2025.02.02ஆந் திகதி மு.ப. 9.30 முதல் 11.30 வரை மக்கொனை அல்-ஹஸனியா மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
விழாவின் பிரதம அதிதியாக களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவர் அல்-ஹாஜ் எம்.எச்.எம். உவைன், கௌரவ அதிதியாக களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் செயலாளர் அல்-ஹாஜ் எம்.எச்.எம். ஹிசாம் மற்றும் சிறப்பு அதிதிகளாக WeHeal Physiotherapy centre பணிப்பாளர் வைத்தியர் Hasna PT, இந்திரிலிகொடை பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் திருமதி. E.H.D. Nipuni Jayakanthi, இந்திரிலிகொடை பகுதிக்குப் பொறுப்பான அபிவிருத்தி அதிகாரி திருமதி. S.T. Udayangani ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ள மேற்படி விழாவை அஹதிய்யாப் பாடசாலையின் அதிபர் அல்-ஹாஜ் ஐ.எம்.எம். உவைஸ் தலைமை தாங்குகின்றார்.
மேற்படி விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரை அன்புடன் அழைக்கின்றோம். ஜிப்ரியா இப்றாஹிம்செயலாளர்மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலை