ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நான்கு மாதங்களில் நாட்டில் பாரிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதற்கு ஆதாரமாக டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 77வது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *