இலங்கையின் அரசத் துறையில் 35,000 பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர (Eranga Gunasekara) அறிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் பல்வேறு இடங்களிலும் தொழில் கோரும் பட்டதாரிகள், தமது தொழில்களை கோரி, போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் இவர்கள் எந்த தொழில்களின் நிமித்தம் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தகவலை அமைச்சர் வழங்கவில்லை.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *