நாட்டில் நாளொன்றுக்கு வாய்ப் புற்றுநோயால் 3 முதல் 4 வரையான நோயாளர்கள் உயிரிழப்பதாக வாய் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் ஆண்களில் பரவும் புற்றுநோய்களில் வாய்ப்புற்றுநோய் முதலிடத்திலுள்ளது.

இந்த வாய்ப்புற்றுநோயால் வருடாந்தம் 2000 முதல் 3000 பேருக்கும் அதிகமானவர்கள் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.இவர்களில் நாளொன்றுக்கு வாய்ப்புற்றுநோயால் 03 முதல் 04 பேர்வரை உயிரிழக்கின்றனர்.

வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்னர் அதற்கான சகல அறிகுறிகளும் தென்படும். இதனால் முதல் நிலையிலே புற்றுநோயை கண்டறிய முடியும்.

அத்தோடு 100 க்கு 90 வீதம் வாய்ப்புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும்.புகையிலை மற்றும் புகையிலையுடன் தொடர்புடைய உற்பத்திகளை பயன்படுத்தல், மதுபாவனை, பாக்கு மற்றும் பாக்குடன் தொடர்புடைய உற்பத்திகளை பயன்படுத்தல் மற்றும் பல வைரஸ் தொற்றாலும் இந்த வாய்ப்புற்றுநோய் பரவுகிறது.இன்று பாடசாலை மாணவர்களிடையே புகைப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களிடையே வாய்ப்புற்றுநோய்க்குரிய ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *