
பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(28.02.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாதத்தை தடுக்க புதிய சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
புதிய சட்டங்களைத் தொகுக்க ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இரத்து செய்யப்படும் என்று, நீதி அமைச்சரும் மன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.