
அமெரிக்காவின் மத்திய, தென் மாகாணங்களை சூறாவளி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சூறாவளியில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களை சூறாவளி தாக்கியதாக கூறப்படுகிறது.பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை சூறாவளியில் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பலர் படுகாயமடைந்ததாகவும், சூறாவளியால் அதிக பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.