
சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை டிசம்பர் 20 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.