எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு இன்று (8) நள்ளிரவு திட்டமிடப்பட்டிருந்த கால அவகாசம் நாளை மறுநாள் (10) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 அக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அஞ்சலில் ஏற்படக்கூடிய காலதாமதங்களையும் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கவனத்திலெடுத்து இந்த கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும்போது ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்குமுகமாக 2024 அக்டோபர் மாதம் 09, 10 ஆகிய இரு தினங்களிலும், பூரணப்படுத்திய அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை அஞ்சலுக்கு ஒப்படைப்பதைத் தவிர்த்து, அவற்றை ஒவ்வொரு மாவட்ட வாரியாக வேறு பிரித்து வெவ்வேறு கடிதவுறைகளில் இட்டு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்காரணங்கொண்டும் இத்திகதி இனிமேல் நீடிக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *