Month: October 2024

ஒருதொகை கடவுச் சீட்டுக்கள் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் – அரசாங்கம் அறிவிப்பு

நாட்டுக்கு அவசியமான 7 இலட்சத்து 50 000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்யவும் இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித…

பொதுத் தேர்தல் – வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை (16) வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்பு எண்களை ஆணைகுழு பெற்றுள்ளதாகவும், அவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருவதாகவும் தேர்தல் ஒழுங்குமுறை ஆணையத்தின்…

தேர்தல்கால செலவுகள் இன்று முக்கிய பேச்சு

பொதுத் தேர்தலுக்கான செலவு ஒழுங்குப்படுத்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இன்று (15) கலந்துரையாடவுள்ளதாகவும் அந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து கட்சிகள் வேட்பாளர்களுக்காக செலவு செய்யவேண்டிய அதிகபட்சத் தொகை அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், இன்று ஊடக பிரதானிகளுடனும்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேற்கு…

கொழும்பு பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்

பொதுத் தேர்தல் செலவீனங்கள் – நாளை முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நாளை (15) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை காலை 9.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் நடைபெறவுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசியல் கட்சிகளின்…

பாடசாலைகளுக்கு தொடர்ந்து விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கல்வி…

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 3 ஜனாதிபதி வேட்பாளர்கள்

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (13) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், பத்தரமுல்லே சீலரத்ன தேரர், முன்னாள்…

அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாது மோசடி செய்த சம்பவத்தில் டபிள்யூ.எம்.…

ஐசிசியின் செப்டெம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக மெண்டிஸ்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செப்டெம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செப்டெம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ட்ரவிஸ் ஹெட் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ்…