Month: October 2024

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது…

அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணய விலை

அத்தியாவசியப் பொருட்களின் இந்த வார நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. சீனி, கோதுமை மா உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் இந்த வாரத்திற்கான நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிடுகின்றது. அதனடிப்படையில் இவ்வாரத்துக்கான…

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத் திகதி நீடிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு இன்று (8) நள்ளிரவு திட்டமிடப்பட்டிருந்த கால அவகாசம் நாளை மறுநாள் (10) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2024 அக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு…

அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் அனைத்தும் இரத்து

அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய ஜனாதிபதி செயலகத்தின் கீழ் “வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகார செயலகம்”, “பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான மக்கள் சபை முறையை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சபை செயலகம்” மற்றும் “விவசாய…

திருமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (8) காலை ஆணின் சடலம் ஒன்று பொது மக்களால் இனங்காணப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த 45 வயதான அமரசிங்கஆராச்சி லாகே சுமித் என்பவரே இவ்வாறுஇனங்காணப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்…

ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் 698 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, காலப்பகுதி வரை 40,109 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு

ஆட்ட நிர்ணய சதி சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது.

சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் சேவை காலம் நீடிப்பு – அமைச்சரவை ஒப்புதல்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவை காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 14-09-2013 முதல் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு எயார் வைஸ் மார்ஷல் ஆர். எஸ். வியன்வல நியமனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.நியமனக் காலம்…

மதுவரி ஆணையாளர் நாயகம் உடனடி நீக்கம் – புதியவரும் நியமனம்

தற்போதைய மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் ஜே.எம். குணசிறி சேவையை உடனடியாக அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக சேவையாற்றும் உள்நாட்டு இறைவரி சேவையின் விசேடதர அலுவலர் யு.டி.என்.…

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் குறித்து வெளியான போலி செய்தி

அரசு பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக…