Month: October 2024

ரஞ்சனுக்கு எதிரான மனு நிராகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று (30) நிராகரித்துள்ளது. பிரதிவாதி தரப்பு…

காதலன் கல்லால் தாக்கியதில் காதலி உயிரிழப்பு

தனது காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் ஒருவர் இன்று பயாகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பயாகல, பஹலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயாகல தியலகொட பிரதேச கடற்கரைக்கு…

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கெக்கிராவ முதுபெருமகம ஏரிக்கரைக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று (30) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சில ஆடைகள் மற்றும் ஒரு ஜோடி காலணிகள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக…

வடமராட்சியில் தம்பதியினர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில்…

பொதுத் தேர்தலில் அமைதியான சூழலை பேணுமாறு வேட்பாளர்களிடம் கோரிக்கை

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30) இடம்பெற்றதாகவும், அது அமைதியாக நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்து இன்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு அமைதியான…

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று இன்று (30) அதிகாலையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது, ​​ஹோமாகம நகரின் மத்தியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர் சுவரொட்டிகளை ஒட்டுவதைக் கண்டு…

கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொகவானை பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயாவில் இருந்து இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (30) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொகவானை தோட்டபகுதியில் உப மின் நிலையத்தின் அருகாமையில் உள்ள ஓயாவில்…

தீபாவளி பண்டிகை – சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை (31) கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு நாளை மறுநாள் (01) சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு மாகாண ஆளுநர்…

11 மாவட்டங்களுக்கு வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு

11 மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச் சீட்டுக்கள் தேர்தல் ஆணையக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

ஹட்டன் பொலிஸ் பிரிவில் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளுக்கிடைப்பட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் தொழில்புரிந்த இவர்கள், தீபாவளி பண்டிகைக்காக…