Month: November 2024

பாராளுமன்ற முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்கள் கூட்டம்

10ஆவது பாராளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவித்தார். அதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி

10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவி செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார். பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சபை…

புதிய சபாநாயகர் தெரிவானார்

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக அசோக்க ரன்வல தெரிவு செய்யப்பட்டுளளார். பிரதமர் ஹரிணி இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.

தேசிய பாதுகாப்பு -அரசுக்கு அறிவுரை கூறும் நாமல்

இராணுவ முகாம்களை விடுவிப்பதில் வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவ முகாமொன்று விடுவிக்கப்பட்டமை குறித்து இன்று (20) தனது எக்ஸ் பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே…

திக்குவலை பகுதியில் துப்பாக்கிச் சூடு

திக்குவலை-வலஸ்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டில் 42 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க…

உயர் தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்தப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் கடந்த மார்ச் மாதம்…

ஐந்து மணி நேர வாக்குமூலம் – சிஐடியிலிருந்து வெளியேறினார் பிள்ளையான்

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறினார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக வெளியான சனல் 4 காணொளி குறித்து வாக்குமூலம் வழங்க…

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய் – சிசு மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்றைய தினம் (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்தார். மன்னார்…

ஹரீன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (20) காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.