Month: November 2024

கரையோர ரயில் சேவை தாமதம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (22) காலை கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காலியிலிருந்து கல்கிஸ்ஸ நேக்கி சென்று கொண்டிருந்த ரயிலொன்று புஸ்ஸ நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து முதல் நாளே சர்ச்சையை கிளப்பினார் அர்ச்சுனா

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றம் சென்ற முதல் நாளிலேயே சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதுடன், இந்த சம்பவம் சிங்கள ஊடகங்களிலும் அதிக கவனத்தை…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (22) முடிவடைகிறது. முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம்…

புதிய அமைச்சுக்களுக்கான பிரதியமைச்சர்கள் நியமனம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கான பிரதியமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிய பிரதியமைச்சர்களின் பெயர் விபரங்கள் கீழே… அதனடிப்படையில், 1. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – பொருளாதார அபிவிருத்தி பிரதி…

மன்னார் வைத்தியசாலையில் தாய், சேய் மரணங்கள் – சுகாதார அமைச்சருக்கு ரிஷாட் கடிதம்!

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரசவத்துக்காக கடந்த செவ்வாய்க்கிழமை (19) மன்னார்…

அரசியலிலிருந்து ஓய்வு – விஜயதாச ராஜபக்ஷ உறுதி

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி தளதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே…

போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது!

மாத்தறை கந்தர பிரதேசத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.…

பாராளுமன்ற முதலாவது கூட்டத் தொடரில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை

தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து எமக்கு அதிகாரத்தை வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தமக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரையும் இந்நாட்டு பிரஜையாகவே பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில்…

பிரசன்ன ரணதுங்க சி.ஐ.டியில் முன்னிலையானார்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் குற்றப்…

மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அமைச்சுப் பதவி அவசியமில்லை – எம்.பி நாமல் கருணாரத்ன

அமைச்சுப் பதவி அவசியமில்லை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிறைவேற்றுவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து தான் வேலை செய்யவில்லை எனவும்,…