Month: December 2024

அரிசி ஆலைகளில் இன்று விசேட சோதனை

பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி அரிசி ஆலைகளில் தினசரி உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு, இருப்பு அளவு மற்றும் சந்தைக்கு வெளியிடப்படும் அரிசியின் அளவு ஆகியவை குறித்த…

காலி துறைமுக அபிவிருத்தி திட்டம்

இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்மொழியப்பட்ட காலி துறைமுக அபிவிருத்தித் திட்டம் ருமஸ்ஸலா (Rumassala Marine Sanctuary) கடல்சார் சரணாலயத்தில் உள்ள பவளப்பாறைகளை மோசமாக பாதிக்கும் என்று 500 பக்க துணை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. பொழுதுபோக்கு மற்றும்…

ஐஸ், குஷ் போதை பொருட்களுடன் மூவர் கைது

90 இலட்சம் பெறுமதியான ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் பொரலஸ்கமுவ, தெஹிவளை மற்றும் கொஹுவல பிரதேசங்களில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை மற்றும் கொம்பனி தெரு பிரதேசங்களைச் சேர்ந்த 40, 41…

நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெங்காயத்துக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில்…

உணவகங்களில் PHI அதிகாரிகள் விசேட பரிசோதனை

எதிர் வரும் நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 1,750 பேர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக…

படுகொலை செய்யப்பட்ட சிறுமி – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கம்பஹாவில் சிறுமி கொலை செய்யப்பட்டு, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பான பல உண்மைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 5 ஆம் திகதி, 14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தாய் ஒருவர் கம்பஹா பொலிஸ்…

அரசியலமைப்பு சபையின் பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் அதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவும், அவரது பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு விடுத்த எச்சரிக்கை

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி, களுத்துறை, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல்…

பாடசாலை சீருடைகள் குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் பாடசாலை சீருடை வழங்குவதில் ஏற்படும் விரயத்தை குறைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

லொஹான் ரத்வத்தவிற்கு விளக்கமறியல்

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அளுத்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (07) விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மேலும், அவரை எதிர்வரும் 9ம் திகதி வரை தடுப்புக்காவலில்…