Month: December 2024

விளம்பர நோக்கங்களுக்காக 12 வயதுக்குட்பட்ட சிறார்களை பயனபடுத்துவது தடை

விளம்பர நோக்கங்களுக்காக 12 வயதுக்குட்பட்ட சிறார்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை அரசாங்கம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறார்களை விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்துவது அடுத்த வருடம் முதல் தடை செய்யப்படுவதாக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி…

ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை மோசடி செய்த வைத்தியர் கைது

தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொனஹேன, பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்…

3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3 மில்லியன் பெறுமதியான அதிகாரிகள் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபரொருவர் இன்று (07) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம், பொத்தனேகம பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் விமானப்படை விமானியான சந்தேக நபர்,…

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் இருவர் பலி!

தொடங்கொடை அருகே மோட்டார் சைக்கிள் பெரிய மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். நெஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த அசங்க சுஜித் அனுரகுமார மற்றும் சுப்பிரமணியம் பத்மராஜா ஆகிய இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சடலங்களும் வில்பத்த…

மின் கட்டணத்தில் இப்போதைக்கு மாற்றமில்லை

மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனையை இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி இப்போதைய மின்கட்டண திட்டமே அடுத்த வருட முதல் 6 மாத காலப்பகுதிக்கும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளின் பற்றாக்குறையுடன் போராடும் சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சு பல அத்தியாவசிய மருந்துகள் உட்பட பல மருந்துகளின் பற்றாக்குறையுடன் போராடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சின் மருந்து விநியோக பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜி. விஜேசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார். மருந்துப் பற்றாக்குறையால் பல மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு…

சிவப்பு சீனிக்கான VAT வரி நீக்கம்- அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிப்பு

சிவப்பு சீனி மீது VAT வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படுமென கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கைக்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு VAT அறவிடப்படுவதில்லை…

10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை முதற்கட்டமாக இறக்குமதி செய்ய நடவடிக்கை

அரசாங்கம் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ள 70,000 மெற்றிக் தொன் அரிசியில் 10,400 மெற்றிக் தொன்களை இறக்குமதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் லங்கா சதொச மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனம் 5,200 மெற்றிக்களை இறக்குமதி செய்யவுள்ளதாக லங்கா சதொச தலைவர் டொக்டர்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், டிசம்பர் மாதம் ஆரம்பித்து முதல் வாரத்தில் 521 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 46,048 டெங்கு நோயாளர்கள்…

நுவரெலியா டிப்போவில் கொலை – கொள்ளை: பொலிஸார் விசாரணை

நுவரெலியா டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலை செய்து டிப்போவில் வைப்பிலிடப்படவிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (06) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. டிப்போவில் காவலாளியாக பணியாற்றிய நுவரெலியா…