Month: February 2025

நாடாளுமன்ற விசேட அமர்வு இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவிப்பதற்காக நாடாளுமன்ற விசேட அமர்வு இன்று நடைபெறுகிறது.நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி, பிரதமர் ஹரிணி அமரசூரிய சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அத்துடன்,…

இன்றுமுதல் மின்வெட்டு இல்லை !

நாட்டில் தினசரி அமுலாக்கப்பட்ட தற்காலிக மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் மாத்திரம் முன்னறிவித்தலுடன் மின்வெட்டு இடம்பெறும் என்று மின்வலு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரற்ற வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் குளிரான வானிலை எதிர்பார்க்கப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய, சப்ரகமுவ,…

ஹொரணை கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

களுத்துறை – ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இன்று(13.02.2025) இடம்பெற்றுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தற்போது…

ஒரு மணிநேர மின்வெட்டு – வெளியானது அறிவிப்பு

நாட்டில் இன்று ஒரு மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, 20 தொகுதிகளின் அடிப்படையில் மின் துண்டிப்பு இடம்பெறுமென மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது அதன்பிரகாரம், இன்று (13) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30…

இயற்கை எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இதன்படி, இன்றைய தினம் 3.610 அமெரிக்க டொலராக இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு…

கடலில் அடித்து செல்லப்பட்ட 12 இளைஞர்கள் : ஒருவர் மாயம்

பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் பாணந்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பாணந்துறை, கெசல்வத்த, கெமுனு மாவத்தையை சேர்ந்த 18 வயதுடைய கேசன்…

அவுஸ்திரேலியாவை 49 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று (12) பகல் நேர…

Update : குவாடமாலாவில் பஸ் விபத்து : 55 பேர்பலி !

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாடமாலா என்கிற நாட்டின் புறநகர்ப் பகுதியில் நடந்த பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குவாடமலாவில் ஒரு நாள் தேசிய துக்க…

அர்ச்சுனா எம்.பியால் தாக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில்

யாழில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சனா சென்று அங்கு…