Month: February 2025

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி‘சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும் என பிரதமர்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று…

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்சப் செயலியில் போலித் தகவல்கள் பகிரப்படுவது குறித்து அவதானமாக இருக்குமாறு தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் போன்றன தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எவ்வித அறிவிப்புகளையும் விடுக்கவில்லை…

நடைமுறைக்கு வரவுள்ள அநுரவின் திட்டம்..!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayaka) முன்வைத்துள்ள ‘GovPay’ டிஜிட்டல் சேவை, எதிர்வரும் 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்த வகையில், இந்த புதிய முயற்சியானது, பாதுகாப்பான மற்றும்…

சர்ச்சையை கிளப்பிய வாகன இறக்குமதிக்கான புதிய விதி

வாகன இறக்குமதியை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பில் அண்மையில் உள்ளடக்கப்பட்டுள்ள விதியை சுட்டிக்காட்டி வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். குறித்த விதியானது, இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திகதிக்கு மூன்று ஆண்டுகள் இடைப்பட்டதாக இருக்க வேண்டும்…

ஆசிரியை கொலை – அவரின் தாயும் சகோதரனும் கைது

கம்புருபிட்டிய பிரதேசத்தில் இளம் ஆசிரியை ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் தாயும் சகோதரனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கத்தி மற்றும் இரும்பு பூந்தொட்டியால் சரமாரியாக தாக்கி ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலையுண்ட பெண்ணின் தாயாரால் பொலிஸாருக்கு எழுதப்பட்டதாக…

தொடரும் 77வது தேசிய சுதந்திர விழாவுக்கான ஒத்திகை

77வது தேசிய சுதந்திர விழாவுக்கான ஒத்திகை இந்த நாட்களில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய மறுமலர்ச்சிக்காக அணிவகுப்போம் என்ற தொனிப்பொருளில் 77 ஆவது தேசிய சுதந்திர நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

நாட்டில் சிக்கன் குனியா நோயாளர்களின் எண்ணிகை அதிகரிப்பு

நாட்டில் சிக்கன் குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். மழையுடன் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே சிக்கன் குனியா நோய் பரவலுக்கு வழிவகுத்ததாகவும் சிறப்பு மருத்துவர்…

சந்தையில் முட்டை,கோழி இறைச்சியின் சில்லறை விலை குறைப்பு

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலை வெகுவாக குறைந்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 26 ரூபா தொடக்கம் 30 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சி 650 ரூபாவிலிருந்து 850 ரூபாவாகவும் காணப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முட்டை…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

இலங்கையின் நிர்மாணத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் ‘ஒட்டுமொத்த செயல்திறன் சுட்டெண்’ கடந்த டிசம்பரில் 51.4 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் காட்சி உயர் மதிப்பைக் காட்டினாலும், கட்டுமானத் துறையின் வளர்ச்சியைத்…