Month: March 2025

அனுராதபுர பெண்மருத்துவர் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் அறிவித்தார். கல்னேவ பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

42 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கும் அபாயம்

கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் இன்று (12) காலை நிலவரப்படி நிரம்பியுள்ளதென்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 7 முக்கிய நீர்த்தேக்கங்கள், அனுராதபுரம் மாவட்டத்தில் 6 முக்கிய நீர்த்தேக்கங்கள்,…

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (12) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும்,…

உலக சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இருக்காது

அடுத்த சில ஆண்டுகளில் உலக சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று உலக லிட்ரோ எரிவாயு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை மெட்ரிக் தொன்னுக்கு 600, 700 மற்றும் 800 அமெரிக்க டொலர்களுக்கு இடையில்…

G.C.E O\L – மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

இன்று (11) நள்ளிரவுக்குப் பிறகு இடம்பெறும் 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள்…

சீனிக்கான மொத்த விலையில் வீழ்ச்சி

உள்நாட்டு சந்தையில் சீனியின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனிக்கான மொத்த விற்பனைவிலை 215 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சிவப்பு சீனிக்கான மொத்த விலை 260…

கடலோர ரயில் சேவை பாதிப்பு

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு அருகில் தண்டவாளம் உடைந்ததால் ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, அந்த நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என மேலும் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில்…

அநுர ஆட்சிபீடமேறி ஐந்தரை மாதங்களில் 5,000 பில்லியன் ரூபா கடன்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, ஐந்தரை மாதங்களாகும் நிலையில், இதுவரையில் 5,156 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இவ்வாறு கடன் பெறுவது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பிவிதுரு ஹெல…

தீவிரமடைகிறது மணல் தட்டுப்பாடு: கட்டட நிர்மாணத்துறை பெரும் வீழ்ச்சி

நாட்டில் தற்போது நிலவும் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டட நிர்மாணக் கைத்தொழில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக கட்டட நிர்மாணத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் 20,000 ரூபாவாக இருந்த ஒரு க்யூப் மணலின் விலை 30,000 ரூபாவரை அதிகரித்துள்ளதாக கட்டட மூலப்பொருட்கள் விநியோகஸ்தர்கள்…