
அமெரிக்காவின் கென்டகி, ஜோர்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளி ஏற்பட்டதைத் தொடர்ந்து 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி ஆளுனர் பெஷியர் கூறியுள்ளார். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ஆளுனர் கூறியதாவது:வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்க வேண்டியுள்ளது.
மக்கள் வீதிகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சூறாவளி தொடங்கியதிலிருந்து, மாநிலம் முழுவதும் 1,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சில பகுதிகளில் கடுமையான காற்று வீசுவதால் மின் தடைகள் அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பகுதிகளில் 15 சென்றிமீற்றர் வரை மழை பெய்துள்ளது.
நிறைய நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது என வானிலை ஆய்வாளர் பாப் ஓரவெக் தெரிவித்துள்ளார்.