திருகோணமலை மூதூரில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஓய்வுபெற்ற அரச ஊழியர்களான 68 மற்றும் 74 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும், ஏனைய இரண்டு பேரக்குழந்தைகளை நன்றாக நடத்துவதாகக் கூறி, இந்தக் கொலையைச் சிறுமி செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர், தஹாநகர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் இன்று காலை 7.30 மணியளவில் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

அவர்களுடன் இருந்த 15 வயது சிறுமி ஒருவரும் இன்று காலை சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நடத்திய விசாரணையில், குறித்த சிறுமியே இந்த இரட்டைக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது.

அதன்படி, கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது, இரட்டைக் கொலையைச் செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது இரண்டு பாட்டிகளும் தன்னை விட மற்ற இரண்டு பேரக்குழந்தைகளை நன்றாக நடத்துவதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட விரக்தியில் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கொலைகளின் போது கூரிய ஆயுதம் பயன்படுத்தியதால் தனது கையிலும் காயம் ஏற்பட்டதாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டார்.

சிறுமியின் தாய் இரவில் வேலைக்கு சென்றிருந்த போதே இந்தக் கொலைகள் நடந்ததாகவும், இறந்த இரண்டு பெண்களில் ஒருவர் அவரது தாயார் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான சிறுமி நாளை (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *