புதிய அரசாங்கத்துக்கு பூரண ஆதரவை வழங்குவதாக ஜப்பான் அரசு தெரிவிப்பு
இலங்கையில் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களை ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கவும், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கவும் ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.