Month: November 2024

வீடொன்றில் கொள்ளையடித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

தெஹிவளையில் வீடொன்றில் கொள்ளையடித்து வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். 1பிசி மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு…

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை 2:1 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றியது. பார்படாஸ், கென்சிங்டன்…

3,000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து

இந்த வருடத்தில் நீதிமன்றங்களால் 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த…

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச துறை ஊழியர்கள் இன்றும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என…

தேர்தல் சர்ச்சை தீர்வு நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட அரசியல் கட்சி கூட்டம்

காலி மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவரினால் நேற்று (07) இரவு ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள விழா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் கட்சி கூட்டம் காலி மாவட்ட தேர்தல் சர்ச்சை தீர்வு நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இக்கூட்டத்துக்கு மாவட்டத்தின் அனைத்து…

பொதுத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள்…

நிதி மோசடி செய்தவர் விமான நிலையத்தில் கைது

நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இலங்கையர் ஒருவர் மலேசியாவில் இருந்து வருகை தந்தபோது சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார். பிரமிட் மோசடி மூலம் பல நபர்களிடமிருந்து 1,800 மில்லியன் ரூபாய் இந்த நபர் மோசடி செய்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டை…

காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்

கொழும்பு உட்பட நாட்டின் பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலவீனமானவர்கள் சுவாசிப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் கொழும்பு மற்றும்…

வென்னப்புவயில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்

வென்னப்புவ, கிம்புல்கான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 65 வயதுடைய ஆண் ஒருவரும் 43 வயதுடைய பெண் ஒருவருமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இரண்டாயிரத்தை நெருங்கும் தேர்தல் விதிமீறல்கள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1938 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 455 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1483 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்…