இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை 2:1 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றியது.
பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பில் சால்ட் 108 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும் இங்கிலாந்து அணி சார்பில் டான் மவுஸ்லி 70 பந்துகளில் 57 ஓட்டங்களையும் சாம் கரண் 52 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில் மத்தேயு ஃபோர்டு 3 விக்கெட்களையும் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
264 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 43 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டினை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக கீசி கார்டி ஆட்டமிழக்காமல் 114 பந்துகளில் 128 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், இலங்கை அணி சார்பில் பிரண்டன் கிங் 117 பந்துகளில் 102 ஓட்டங்களையும் எவின் லூயிஸ் 17 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றார்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ரீஸ் டோப்லி மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 1 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
இப் போட்டியின் நாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய பிரண்டன் கிங் தெரிவாகினார்.
இப் போட்டித் தொடரில் நாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய மத்தேயு ஃபோர்டு தெரிவாகினர்.