Month: November 2024

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய 8 வேட்பாளர்கள் கைது

பொதுத் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். மேலும், சட்டத்தை மீறி ஒட்டப்பட்ட 9 இலட்சம் தேர்தல் சுவரொட்டிகள்…

சந்திரிக்காவின் பாதுகாப்பை குறைக்கவில்லை – அமைச்சர் விஜித அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கான பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். தற்போது வரையில் 57 பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவருக்கான பாதுகாப்பு 30 பேர் வரையில் குறைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.…

இணையவழி கடவுச்சீட்டு: முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பதிவு செய்யும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (06) முதல் புதிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இணையவழி கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.immigration.gov.lk/MakeAppointments/ வழியாக முன்பதிவு செய்யலாம் அதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கிய…

முஸ்லிம் திருமண சட்டம் திருத்தப்படாது – அரசாங்கம் தீர்க்கமான முடிவு

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சட்டம் எக்காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது என்றும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். சமயங்களில் சார்ந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சமய தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன்…

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சிறிபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் யானையிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கியே இவ்வாறு மரணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம்…

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் – டிரம்ப் முன்னிலை

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து குடியரசு கட்சி தலைவர்…

ஆறு மாகாணங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கை

இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் கடுமையான இடி மின்னலுக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன்…

ஜோன்ஸ்டன்பெர்னாண்டோவின் ரிட் மனு வாபஸ்

கொழும்பு ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் பி.எம்.டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை…

உலகளவில் கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 95ஆவது இடம்

உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இலங்கை 95 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியையும்…

பெருகமலையில் ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகமொன்றைத் திறந்து வைத்த இப்திகார் ஜெமீல்

பேருவளை பெருகமலை பகுதியில் தேர்தல் பிரசார அலுவலகமொன்றை ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் இப்திகார் ஜெமீல் திறந்து வைத்தார். அதனை அடுத்து பேருவளை பிரதேச சபை வேட்பாளர் இர்சாத் நிஸாம் தலைமையில் பிரசாரக் கூட்டமொன்று இடம் பெற்றது.களுத்துறை மாவட்ட வேட்பாளர்களான இஸ்திகார்…