Month: December 2024

புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் வாழ்த்து!

10ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (17) சபையில் வாழ்த்து தெரிவித்து, உரையாற்றிய…

யாழில் எலிக்காய்ச்சல் தீவிரம் – நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் மீண்டும் மழை பெய்து வருவதால் யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (17) காலை வேகமாக அதிகரித்துள்ளது. முன்னதாக, பருத்தித்துறை விசேட சிகிச்சைப் பிரிவில் 17 நோயாளர்கள் மாத்திரமே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாகத்…

அனைவரின் ஆதரவையும் கோரும் புதிய சபாநாயகர்

நாட்டின் நல்வாழ்வையும், மக்களின் அபிலாஷைகளையும் பேதமின்றி நிறைவேற்றும் சிறந்த பாராளுமன்றமாக இதனை உருவாக்குவதற்கு அனைவரினதும் ஆதரவை கோருவதாக புதிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். புதிய சபாநாயகர் மேலும் கூறியதாவது;என்னை சபாநாயகராக நியமித்ததற்கு வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்…

தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் செலவு அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படும்

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சியின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் செலவு அறிக்கைகள் இன்று (17) முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கைகள் அனைத்து மாவட்டச் செயலகங்களிலும்…

ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயகர்

பொலநறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்

சபாநாயகர் இராஜினாமா குறித்து உத்தியோகபூர்வ வர்த்தமானி வெளியீடு

சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல இராஜினாமா செய்ததற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 64(2) பிரிவின்படி, பாராளுமன்ற சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து கடந்த டிசம்பர் 13, 2024 முதல் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அன்பளிப்பு என பரிமாறப்படும் போலி செய்தி

ஜனாதிபதி அன்பளிப்பு எனும் பெயரில் பரவி வரும் போலிச் செய்தி ஒன்று குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கமொன்றை அளித்துள்ளது. இது குறித்த அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,”ஜனாதிபதி அன்பளிப்பு” எனும் பெயரிலான தலைப்பில்…

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (16) மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை சற்றுமுன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (16)…

கண்டியில் வாகன விபத்து- பாடசாலை மாணவி பலி!

கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று (16) தனியார் பஸ்ஸுடன் தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த 17 வயதுடைய பாடசாலை மாணவி…