Month: December 2024

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை நிலையத்திற்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை (04) முதல் மீள…

புதிய ஜனநாயக முன்னணியின் குழுத் தலைவர் நியமனம்

புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்தத்…

பாராளுமன்றம் நாளை இரவு 9 மணிவரை

பாராளுமன்ற அமர்வை நாளை இரவு 9.00 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை மாலை 5.30 மணி முதல்…

பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு

பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியின் பாதகமான விளைவுகளால், பாடசாலை மாணவர்களின் கல்வியில் கணிசமான எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், 55% பாடசாலை மாணவர்களின் கல்வியை அது மோசமாகப் பாதித்துள்ளதாகவும் மக்கள்…

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் நாளை

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மாணிக்கக்கல் வியாபாரியின் பயணப்பொதியை திருடிய பணிப்பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் 13 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வைத்திருந்த பொதியை (சூட்கேஸ்) திருடிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை களுபோவில பகுதியைச்…

அஸ்வெசும வேலைத்திட்டத்தை நீடிக்க தீர்மானம்

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “அஸ்வெசும பயனாளிகளுக்கு உதவிகளை தொடர்ந்து வழங்க அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. இதன்படி, 400,000 பேருக்கான அசஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன்…

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தோனேசிய பிரஜைகள் எண்மர் கைது!

விமான அனுமதிப்பத்திரம் மற்றும் விசா இன்றி நுவரெலியா வணக்கஸ்த்தலத்தில் தங்கியிருந்த 8 இந்தோனேசிய பிரஜைகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வணக்கஸ்த்தலத்திற்கு சென்று சோதனையிட்டதில் 8 இந்தோனேசிய பிரஜைகளை…

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பிரேசிலில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்களுடன் ‘பொல்வத்த ஜனக’ என்ற சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக களுத்துறை குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. பாணந்துறை மொதரவில பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தானியங்கி துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்களுடன் குறித்த…

எம்.பியாக பதவியேற்றார் நளீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மொஹம்மத் சாலி நளீம் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்