ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இராஜிநாமா
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
www.beruwalanews.com was established in the mid 2023 as a registered news web portal affiliated with the Ministry of Mass Media with the intention of serving our public with equipoise and unbiased news reports from authentic sources
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரச பொதுமன்னிப்பின் கீழ் 389 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 389 சிறைக்கைதிகளில் நால்வர் பெண் கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது
வீட்டில் நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மகன் தாயை தள்ளிவிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று (23) உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம வல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த தீபா மாலா குமாரி…
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் கட்டண அறவிடுவது தொடர்பான வரையறைகளை விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (24) மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு வரையிலான நீண்ட தூர பயணங்களுக்கு சுமார் 50…
ஜா-எல சாந்த ஹானா பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குறித்த வீட்டின் கேட் மற்றும்…
பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்…
காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமாரிடம் நேற்று (23) கோரிக்கை விடுத்தார்.…
இலங்கை முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலை பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி நூற்றாண்டு விழா காண்கிறது. 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை 24 ஆம் திகதி (2024-12-24) செவ்வாய்க்கிழமை வெகு…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 13 வகை மருந்துகள் முறையான தரமின்மை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்குள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இவ்வாறு பதின்மூன்று மருந்துக் குழுக்களும்,…