Month: December 2024

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சோதனை

நாடளாவிய ரீதியில் பண்டிகை காலம் முடியும் வரை இன்று (23) முதல் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில்…

பிரேசிலில் சிறிய ரக விமானம் விபத்து – 10 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர். இந்நிலையில், கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம்…

முன்னாள் ஜனாதிபதிமாருக்கான முப்படை பாதுகாப்பு இன்றுமுதல் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை (23) முதல் உத்தியோகபூர்வமாக விலக்கிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்திருந்தார்.அதன்படி, இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொலிஸார் மாத்திரமே பாதுகாப்பு…

மூன்றாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பம் குறித்து வெளியான அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2ஆம் திகதி வியாழக்கிழமை…

யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (22) உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய கந்தசாமி குணரத்தினம் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக…

பாடசாலை உபகரணங்கள் தொடர்பில் விசேட கோரிக்கை

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சில பாடசாலை உபகரணங்களின் விலைகள் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் நீக்கினால் இந்த…

தாயும் மகளும் ரயிலில் மோதி பலி

செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு வந்த…

வவுனியாவில் அதிக பனிமூட்டம்

வவுனியாவில் இன்றையதினம் கடும் பனி மூட்டத்துடனான வானிலை நிலவுவவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும் இன்றைய தினம்(22) சற்று அதிக பனி மூட்டமாகக் காணப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன…

கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் பயணித்த ஒருவர் தெமட்டகொட பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில், குறித்த இடத்திற்கு சென்று பார்த்த போது, துணி துண்டில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம்…

நடப்பாண்டில் இது வரை வீதி விபத்துகளில் 2243 பேர் உயிரிழப்பு

நடப்பாண்டின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 13, 2024 வரை வீதி விபத்துகளில் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 22,967 வீதி விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 2,141 மரண விபத்துகள் அடங்கும்.…