Month: January 2025

இந்து கைதிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்து கைதிகளின் உறவினர்கள் கைதிகளை சந்திக்க சிறைச்சாலைகள் திணைக்களம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பார்வையாளர்கள் தங்கள் வருகையின் போது ஒரு கைதிக்கு போதுமான உணவை மட்டுமே கொண்டு வர வேண்டும் என்று…

லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதுடன் காட்டுத்தீ பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த 7ஆம் திகதி காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால்…

கருவாடு விற்பனை செய்யும் வர்த்தகர் மீது துப்பாக்கி பிரயோகம்

மாத்தறை,தெவிநுவர, தல்பாவில பிரதேசத்தில் நேற்று (12) பிற்பகல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கந்தறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர், ஆரம்பத்தில் உலர்ந்த மீன்களை வாங்க…

புதிய மருந்து ஆய்வகங்களை நிறுவ திட்டம்

மருந்துகளை பரிசோதிப்பதற்கு அவசியமான புதிய ஆய்வகங்களை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர்…

ஜனாதிபதி இன்று இரவு சீனா பயணம்

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (14) முதல் 17 ஆம்…

மூளைக் கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம்

மூளையிலுள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு வரதராஜன் டிலக்சனால் புதிய இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரிக்கு சென்ற வரதராஜன் டிலக்சனால், மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம்…

நிரம்பி வழியும் தறுவாயில் 27 நீர்த்தேக்கங்கள்

73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 07 நீர் நிரம்பி வழியும் மட்டத்தை இதுவரை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் பி.எஸ்.டி ஹேரத்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்…

Update: பாடசாலை மாணவி கடத்தல் – வேன் சாரதி கைது!

கண்டி, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக தனது நண்பி ஒருவருடன் தவுலகல நகருக்கு சென்று கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் (11) காலை 7.15…

மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு

தைப் பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தோட்ட மக்கள் சிரமத்தில் உள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் அரிசியிலிருந்து பால் சாதம் தயாரிப்பது கடினம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த சில வாரங்களாக சந்தையில் அரிசியின்…