Month: January 2025

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை வைத்திருந்த நபர் ஒருவரை கிரநேகம பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (24) பிற்பகல், கிரனேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பதாய பகுதியில் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

சீரற்ற காலநிலையால் 91,101 பேர் பாதிப்பு – இருவர் மரணம்

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் 91,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள பகுதிகள், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகியவை…

சங்கக்காரவுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, எம்.சி.சி உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி தற்போதைய ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷாவும் இந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளார். குறித்த குழுவில் முன்னாள் இந்திய தலைவர், சவுரவ் கங்குலி,…

சாரதிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

மலைப்பாங்கான பகுதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளரான மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய நாட்களில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை…

கோபா குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 10வது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோபா குழு) தலைவராக நியமிக்கப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அந்தக் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இள வயது பெண்களின் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

இள வயது பெண்களின் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அண்மைக்காலமாக பெண்கள் மத்தியில் புகைத்தல் பயன்பாட்டு வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக தேசிய சுவாச விஞ்ஞான நிறுவனத்தின் விசேட சத்திர…

ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது

களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை பிரதேசத்தில் வைத்து 38 மற்றும் 39 வயதுடைய இருவரே…

ரணில் சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்துவரும் கலந்துரையாடல்களில், எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில்…

வீட்டில் கசிப்பு தயாரித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

வீட்டில் கசிப்பு தயாரித்துக்கொண்டிருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நேற்று (23) மாலை கைது செய்ததாக ஒகவெல பொலிஸ் தெரிவித்துள்ளது. மதத்தேனகம, விதாரந்தேனிய பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். 54 வயதான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளான…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ…