Month: January 2025

33 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் அருகே இலங்கை கடற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதன்போது மூன்று இந்திய மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

3 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 29 பேர் படுகாயம்

காலி, அங்குலகஹா பகுதியில் இன்று (26) காலை மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓடிக்கொண்டிருந்த இரண்டு பஸ்களும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

நீரில் மூழ்கி சிறுவன் பலி!

வாரியபொல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் குளிப்பதற்குச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறதுஇந்த சம்பவம் நேற்று (25) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குவாரியில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் பிரதேசவாசிகள் வைத்தியசாலைக்கு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு…

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, சற்று முன்னர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

சீரற்ற வானிலையால் 90 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டை பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக 320 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 48 நீர்த்தேக்கங்கள் இன்னும் நிரம்பி வழிகின்றன என்றும் நீர்ப்பாசனத் துறையின்…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி

ஜனவரி 27 ஆம் திகதி இந்தியாவிலிருந்து 4,500 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (STC) தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உப்பின் முதல் தொகுதி இது என்றும், ஜனவரி 31 ஆம் திகதிக்குள் கூடுதலாக…

அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்! மருத்துவ சங்கம் எதிர்க்கும் யோசனை

மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய மதுபான போத்தல்களை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை மேலும் பாதிப்புக்களை அதிகரிக்கும்…

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த திணைக்களம் (Department of Meteorology) இன்று (25.01.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும்…

யோஷித்த ராஜபக்ஷ கைது

முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்தையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.