Month: January 2025

Breaking :- புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்றைய தினம்(23) 3.99 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக…

கோழி இறைச்சியின் பாகங்கள் சீனாவுக்கு

கோழி இறைச்சியின் பாகங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கோழி இறைச்சியிலிருந்து அகற்றப்படும் கோழித் தலை மற்றும் கால்களே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற…

லொஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத்தீ

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த…

அமெரிக்காவில் பனிப்புயல் : 4 பேர் பலி!

அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ், லூசியானா மற்றும் டெக்சாஸில் கடும் பனிப்புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல வாரங்களாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் கடுமையாக வீசியதால் டெக்சாஸ், லூசியானா உள்ளிட்ட நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. நியூயோர்க்…

சீன அரசாங்கத்திடமிருந்து 500 மில்லியன் யுவான் மானியம்

ஜனாதிபதியின் சீன விஜயத்துடன் இணைந்து அந்நாட்டுக்கு 500 மில்லியன் யுவான் மானியம் கிடைத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். இந்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த மானியம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர்…

அர்ச்சுனா எம்.பி அனுராதபுரம் நீதிமன்றத்தில்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டுகளுக்காக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று காலை அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு அனுராதபுரம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். வழக்கறிஞர் சுனந்த தென்னகோன் தாக்கல் செய்த…

உள்ளூராட்சித் தேர்தல் திருத்த சட்டமூலம் – ஏற்பாடுகளுக்கு எதிராக மனு தாக்கல்

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த மனு ஸ்ரீலங்கா…

நீலாவணையிலும் மதுபானசாலை மூடக்கோருகிறார் கோடீஸ்வரன் எம்.பி.

‘‘நீலாவணையில் புதிதாக திறக்கப்படும் மதுபானசாலையை மூடுவதற்கு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா…