Month: January 2025

மஹிந்த ராஜபக்ஷ அவராகவே வீட்டிலிருந்து வெளியேறலாம் – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு வழங்கப்பட்டுள்ள அரச இல்லத்திலிருந்து வெளியேற நாங்கள் கூறும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. அவராகவே அந்த வீட்டிலிருந்து வெளியேற முடியும்” என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (21) இடம்பெற்ற…

இன்னும் 06 மாதங்களில் பாதுகாப்பு தேடுவீர்கள் – சாமர எம்.பி.

‘‘எதிர்க்கட்சியிலுள்ள எங்களுக்கு பாதுகாப்பு அவசியமில்லை. அரசாங்கத்திலுள்ளவர்களுக்கே பாதுகாப்பு தேவைப்படுகின்றது. இன்னும் ஆறு மாதங்களில் அவர்கள் பாதுகாப்பைத் தேடும் நிலைமை உருவாகும் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா…

நாமல் எம்.பியால் சபையில் சர்ச்சை

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் இருதரப்பினருக்குமிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்…

முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் அரசாங்க வீடுகளின் மாதாந்த வாடகை மதிப்புகளை வெளியிட்ட ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சொகுசு வீடுகளை வழங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள கணிசமான செலவுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மாதாந்தம் 2 மில்லியன் ரூபா பெறுமதியான அரசாங்கத்திற்கு சொந்தமான வீட்டில் வசிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதேபோன்று…

ஹர்ஷ இலுக்பிட்டிய உயர் நீதிமன்றில் ஆஜர்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (22) உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இ-விசா வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த…

கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறப்பு

அண்மைய நாட்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (21) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை உடுதும்பர கஹட்டகொல்ல பகுதியிலிருந்து மேடுகள் மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் வீதியை மூடுவதற்கு நேற்று…

தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குக- ஜெயந்த சமரகோன் அரசிடம் கோரிக்கை

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு உரங்களின் விலையேற்றமே பிரதான காரணம் என அதன் தலைவர் ஜெயந்த சமரகோன் குறிப்பிட்டார்.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்…

அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று (20) இரவு அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் கல்வல சந்திப் பகுதியில் போக்குவரத்துப்…

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சி.ஐ.டியில் வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க சென்றுள்ளார். தென் கொரிய வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக மனுஷ நாணயக்கார வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் நேற்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்…