Month: February 2025

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு…

ஹிருணிகாவுக்கு பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட சில சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(10) குறித்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான…

அதிகாலையில் கோர விபத்து – கொழும்பு நோக்கி பயணித்த 4 பேர் பலி – 28 பேர் படுகாயம்

குருணாகலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று அதிகாலை கந்துருவெலவிலிருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, தோராய…

மசகு எண்ணெயின் விலையில் சரிவு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்…

கொழும்பு துறைமுகப் பகுதியில் இதுவரை 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பு துறைமுகப் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார். அடையாளம் காணப்பட்ட சில எலும்புக்கூடுகளில் குறிப்பிடத்தக்க அளவு உடைந்த பாகங்கள் இருப்பதாகவும் மற்றும்…

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு

நாட்டின் 9 பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது. அதன்படி காலி, கண்டி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில், காலியிலுள்ள கராபிட்டிய…

நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கு காரணம்

பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் மின் விநியோகத்தில் பெரும் தடங்கலை ஏற்படுத்தியதாகவும், இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம்…

அர்ச்சுனாவை கடுமையாக தாக்கி பேசிய சிறீதரன்

மக்களினுடைய தேவைப்பாடுகளை நாடாளுமன்றத்தில் தமது தரப்பு பேசுவது பிழை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தான் பேசுவது மாத்திரம் சரி என்றும் கூறும் ஒரு நிலைப்பாட்டில் இருப்பதாக சி.சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி…

இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணம் குறைப்பு

இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைக்கப்படும் என்று நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதிகள் அமைச்சு அறிவித்துள்ளது. சிறிய அளவில் தண்ணீரைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதே நீர் கட்டணக் குறைப்பின் நோக்கம் என்று அமைச்சர் அனுர கருணாதிலக்க கூறுகிறார்.…

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44 ,293 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 5,823 சுற்றுலாப்பயணிகளும், ரஸ்யாவில் இருந்து 5,795 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 4,710 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு…