ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளுக்கு 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 119 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், பங்களாதேஷ் அணி சார்பில் ஜாக்கர் அலி ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 37 ஓட்டங்களையும் சௌமியா சர்க்கார் 49 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றார்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் நங்கெயாலியா கரோட் 3 விக்கெட்டுகளையும் ரஷீத் கான் மற்றும் அல்லா கசன்ஃபர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
253 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 76 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், ஆப்கானிஸ்தான் அணி சார்பில் செதிகுல்லா அடல் 51 பந்துகளில் 39 ஓட்டங்களையும் குல்பாடின் நைப் 25 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றார்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் நசும் அகமது 3 விக்கெட்களையும் மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்களையும் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் தஸ்கின் அஹமது தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இப் போட்டியின் நாயகனாக பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய அணித் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவாகினர்.
இரண்டு அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் இறுதி போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளது.