இலங்கை அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் சரித் அசலன்க 35 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 40 பந்துகளில் 51 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 16 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளையும் குடாகேஷ் மோதி,அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப் மற்றும் ஷமர் ஸ்பிரிங்கர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பிரண்டன் கிங் 33 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஈவின் லூயிஸ் 28 பந்துகளில் 50 ஓட்டங்களையும் ரோஸ்டன் சேஸ் 16 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மதீஷ பத்திரன 2 விக்கெட்டுகளையும் கமிந்து மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இப் போட்டியின் நாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய பிரண்டன் கிங் தெரிவாகினர்.
இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளது.