Month: December 2024

தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை இரு வாரங்களுக்கு நீடிக்க தீர்மானம்

தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி முதல் சுமார் 25,000 பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியபத்திரன…

புதிய பிரதம நீதியரசர் இன்று பதவி பிரமாணம்

புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். பிரதம நீதியரசராக பதவி வகித்த ஜயந்த…

பதுளை தெமோதரை இடையேயான புகையிரத சேவை வழமைக்கு

உடுவர பிரதேசத்தில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்ட பதுளை தெமோதரை இடையேயான புகையிரத சேவை இன்று (2) காலை முதல் வழமைப்போல் இயங்குமென நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை – பதுளை…

சுதந்திர தின விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தூதுவர்களுக்கு அழைப்பு

இலங்கைக்கான 9 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோரை சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில்புர்கினா பாசோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அஜர்பைஜான் குடியரசு,…

பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி குறைப்பு

நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பெரிய வெங்காயத்தின் விலையில் கவனம் செலுத்தி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்பு

அம்பாறை, பொத்துவில், பகுதியில் ஆற்றின் குறுக்கே சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை முதலை பிடித்துச் சென்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொத்துவில் பச்சரச்சேனையைச் சேர்ந்த ஏ அமீன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் கடற்படையினரும்…

இன்று உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிப்பு

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இவ்வருடம் 36 ஆவது தேசிய எயிட்ஸ் தின நிகழ்வுகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த…

மல்வத்து ஓயா வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவப் பிரிவினால், மல்வத்து ஓயா குறித்து 2024 நவம்பர் 27ஆம் திகதி விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஆறுகளின்…

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட…

வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் பலி!

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான எச்.கே. பிரசன்ன குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்தக் கொலையுடன் செல்ல கதிர்காமம்…