Month: January 2025

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு குறித்து விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாதத்திற்கு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் எதுவும் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

88,000 மெற்றிக் தொன் அரிசி துறைமுகத்திலிருந்து வெளியேற்றம்

அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து இன்று (4) வரை 88,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து அகற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட…

CID விசாரணையின் பின்னணி.. பசில் கைது செய்யப்படலாம்!

கடற்படை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ச, எவ்வாறு சொத்துக்களை சேர்த்தார் என்பது குறித்து விசாரிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது…

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் 8 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் சுமார் 30 பயணிகளுடன் சென்ற விரைவு படகு நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி கவிழ்ந்தது. இவ் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும்…

வெலிகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வெலிகம – கப்பரதோட்டை வள்ளிவல வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பெரும் அதிரடி பாய்ச்சலுக்கு தயாராகும் அநுர

அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), அவர்களது கட்சிக்கொள்கையிலிருந்து விடுபட்டு யதார்த்தத்திற்கு திரும்புவார்களாயின் அது பெரும் அதிரடி பாய்ச்சலாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழக போராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

பாரிய மோசடியில் ஈடுபட்ட கல்விப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணை

சாதாரண தர மாணவர்களுக்கான கணிதப் பாட கருத்தரங்கு நடத்தியதாக போலி ஆவணங்கள் மூலம் ஆறுலட்சம் ரூபா மோசடி செய்த கல்விப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு அநுராதபுரம்…

கோட்டை பழைய பொலிஸ் தலைமையகத்தில் திருட்டு

கோட்டை பழைய பொலிஸ் தலைமையக கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏழு சி.சி.ரி.வி கெமராக்கள் மற்றும் டி.வி.ஆர் இயந்திரம் என்பன திருடப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 23ஆம் திகதி வரையான…

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை ஐரோப்பிய நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.நிலநடுக்கமானது பூமியில் இருந்து 104 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.…

கடவுச்சீட்டு வழங்குவதில் மீண்டும் சிக்கல்

கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதிக்குப் பின்னரான திகதிகளே ஒதுக்கப்படுகின்றது. இதன் காரணமாக புதிய விண்ணப்பதாரிகள் சுமார் ஐந்து…