Month: February 2025

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவினரால் இரண்டாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கை மூலம் 11 அமைச்சுகளின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் 05 மாகாண சபைகளில்…

இலங்கையை உலுக்கிய கொலை; பெண்ணை கண்டுபிடிக்க உதவிகோரும் பொலிஸார்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்றையதினம் (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக கூறப்படும் குறித்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள…

ஒன்றரை கோடி ஒப்பந்தம் ;கனேமுல்ல சஞ்சீவ கொலையில் வெளிவரும் பகீர் தகவல்

கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது நீதிமன்ற அறையில் சாட்சிக் கூண்டில் வைத்து கொல்வதற்கு ஏற்பாடு செய்த கொலையாளி அதை ஒன்றரை கோடி ரூபாய்க்கு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து இந்த ஒப்பந்தத்தை…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை…

கல்லோயாவில் ரயில் விபத்து – 5 யானைகள் பலி

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்லோயா புகையிரத நிலையத்துக்கு அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மேலும் இரு யானைகள் காயமடைந்துள்ளன. விபத்தின்…

கட்டுப்பணத்தை மீள செலுத்த தீர்மானம்! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்காக வைப்புத்தொகையை செலுத்தியவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி இதற்கு தேவையான ஆவணங்களை இந்த மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட மாவட்ட…

அதிகரிக்கும் வெப்பம் – மக்கள் அவதானம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் வெப்பமான வானிலை நிலவி வருவதாகவும், இதனால் கவனம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இந்த…

மு.கா முக்கியஸ்தர்கள் – இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு.!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்புக்கமைய, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (18) பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றது. இதன்போது, லாஹூர்…

தெஹிவளை ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

தெஹிவளை, திவுல்பிட்டிய, பிபிலியானையில் உள்ள மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது…

ரயிலில் மோதி ஒருவர் பலி!

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (19) அதிகாலை இடம்பெற்ற மேற்படி விபத்தில் பலத்த காயமடைந்த நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்…