Month: February 2025

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரியும் அவருக்கு உடந்தையாக இருந்த செவ்வந்தி என்ற பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டிற்குள் வைத்து பாதாள உலகக் குழு…

சஞ்சீவ படுகொலை விவகாரம்! பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அழைத்து சென்றதான சந்தேகத்தின் பேரில்…

அதிகரிக்கும் வெப்பநிலை: 7 மாகாணங்களுக்கு முக்கிய எச்சரிக்கை

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து இலங்கை வளிமண்டளவியல் திணைக்களம் 7 மாகாணங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (21.02.2025) பிற்பகல் 3.00 மணியளவில், இயற்கை ஆபத்துகள் குறித்த முன்னெச்சரிக்கை மையத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய,…

நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: நாமலின் கருத்து தொடர்பில் ஸ்ரீநேசன் கூறும் விடயம்

தேசிய பாதுகாப்பு பலவீனமாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளமை அடுத்த கட்டத்திற்கான ஆரம்பமாகவும் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும், சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்…

வாய்ப்புற்றால் நாளொன்றுக்கு 04 பேர் மரணம்

நாட்டில் நாளொன்றுக்கு வாய்ப் புற்றுநோயால் 3 முதல் 4 வரையான நோயாளர்கள் உயிரிழப்பதாக வாய் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க மேற்கண்டவாறு…

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கும் பாதுகாப்பு இல்ல வலையமைப்பில் இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.2025 ஆண்டு ஜனவரி மாதம்…

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் ஜா-எல உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகிறனர்

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 345 கடைகள் மீது வழக்கு பதிவு

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ததற்காக 345 கடைகள் மீது நுகர்வோர் விவகார ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் 2,725 கடைகளை ஆய்வு செய்துள்ளதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரிசி விற்பனை விலைகளை காட்சிப்படுத்த…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை…

வித்யா படுகொலை வழக்கு – முன்னாள் DIGக்கு கடூழிய சிறைத்தண்டனை

வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று(20) தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, லலித்…