மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இரண்டு அணிகளுக்கு 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பெதும் நிஸ்ஸங்க 49 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 25 பந்துகளில் 26 ஓட்டங்களையும் குசல் பெரேரா 16 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளையும் அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப் மற்றும் ஷமர் ஸ்பிரிங்கர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 16.1 ஓவர்கள் நிறைவில் 89 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் ரோவ்மேன் பவல் 17 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அல்சாரி ஜோசப் 10 பந்துகளில் 16 ஓட்டங்களையும் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 16 பந்துகளில் 14 ஓட்டங்களையும் பெற்றார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அறிமுக வீரர் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும் அணித் தலைவர் சரித் அசலன்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரன 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இப் போட்டியின் நாயகனாக இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினர்.

இரண்டு அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் இறுதி T20 போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *