மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை 2:1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் ரோவ்மேன் பவல் 27 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் குடாகேஷ் மோதி 15 பந்துகளில் 32 ஓட்டங்களையும் பிரண்டன் கிங் 19 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட்டுகளையும், அணித் தலைவர் சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், நுவன் துஷார மற்றும் மதீஷ பத்திரன தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெதும் நிஸ்ஸங்க 22 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் குடாகேஷ் மோதி 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப் போட்டியின் நாயகனாக இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய குசல் மெண்டிஸ் தெரிவாகினார்.

இப் போட்டித் தொடரில் நாயகனாக இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *