வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றது.

ஓமான், அல் அமரத் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 52 பந்துகளில் 83 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஜுபாயத் அக்பரி 41 பந்துகளில் 64 ஓட்டங்களையும் கரீம் ஜனத் 20 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ராசிக் சலாம் 3 விக்கெட்களையும், ஆகிப் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற குறித்த இலக்கு நோக்கி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ரமன்தீப் சிங் 34 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும் இந்திய அணி சார்பில் ஆயுஷ் படோனி 24 பந்துகளில் 31 ஓட்டங்களையும் நிஷாந்த் சிந்து 13 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றார்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் அல்லா கசன்ஃபர் மற்றும் அப்துல் ரஹ்மான் ரஹ்மானி தலா 2 விக்கெட்களையும் ஷரபுதீன் அஷ்ரப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப் போட்டியின் நாயகனாக ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய செடிகுல்லா அடல் தெரிவாகினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *