நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சக்கரி ஃபோல்க்ஸ் ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், நியூசிலாந்து அணி சார்பில் மைக்கல் பிரேஸ்வெல் 24 பந்துகளில் 27 ஓட்டங்களையும் வில் யங் 19 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும் மதீஷ பத்திரன, நுவன் துஷார மற்றும் வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் சரித் அசலன்க ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 16 பந்துகளில் 23 ஓட்டங்களையும் குசல் பெரேரா 17 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றார்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் சக்கரி ஃபோல்க்ஸ் 3 விக்கெட்டுகளையும் அணித் தலைவர் மிட்சல் சான்ட்னர், கிளன் பிலிப்ஸ் மற்றும் மைக்கல் பிரேஸ்வெல் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இப் போட்டியின் நாயகனாக இலங்கை அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவாகினர்.
இரண்டு அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.