Month: March 2025

முதன் முதலாக நாடாளுமன்ற உப முதற்கோலாசான் நியமனம்

இலங்கையில் முதன் முதலாக நாடாளுமன்ற, ஆளும் கட்சியின் உப முதற்கோலாசானாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம் இலங்கைப் நாடாளுமன்ற அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்றாகும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அரசாங்கப் பணிகளுக்கு…

பணத்தை இழந்து விடாதீர்கள் ; பொதுமக்களை எச்சரித்த இலங்கை மத்திய வங்கி

மரங்கள் நடுவதன் மூலம் மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும் முதலீட்டு வாய்ப்புகள், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக இருக்கலாம் என இலங்கை மத்திய வங்கி மக்களை எச்சரித்துள்ளது. இவ்வாறான மோசடித் திட்டங்களில் ஈடுபட்டு உங்கள் பணத்தை…

மாணவனின் காதை காயப்படுத்திய அதிபர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பொலன்னறுவையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை தாக்கி அவரது ஒரு காதை காயப்படுத்திய அதே பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த அதிபர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவன்…

வங்கி அட்டைகளுக்கு எரிபொருள் இல்லை – பெற்றோலிய விநியோகஸ்தர் சங்கம் அறிவிப்பு

தொழில்துறை பங்குதாரர்களின் தொடர்ச்சியான எதிர்ப்புகள் இருந்தபோதிலும், எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் கமிஷனை நீக்குவது குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதிகப்படியான கட்டணங்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த முடிவை மாற்ற முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…

மாணவர் மீது தாக்குதல் – பாடசாலை அதிபர் கைது

பொலனறுவை பாடசாலையில் 11 ஆம் வகுப்பு மாணவரொருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலுக்குள்ளான மாணவர் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முதலாம்…

பொலனறுவையில் கனமழை – முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

பொலனறுவை மாவட்டம் உட்பட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும் கவுதுல்ல குளத்தின் 2 வான்…

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எரிபொருள் ஒப்பந்தங்களை மீறும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அறிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் இன்றைய தினமும் சீராக நடைபெறுவதால் அதற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடுமையான மின்னல்,கனமழைக்கு வாய்ப்பு

நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (02) மாலை அல்லது இரவில் பலத்த மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

இரு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இரு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல…

எரிபொருள் பற்றாக்குறையா? – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பது என்ன?

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (02) தொடர்ந்து நடைபெறும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…