Month: March 2025

சில நாடுகளுக்கு இலவச விசா வசதிகள் வழங்கல்

இதுவரை 39 நாடுகளுக்கு இலவச விசா வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச விசா வசதிகள் வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று (15) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் விசாரணை…

இலவச பாடசாலை சீருடைகளை வழங்க சீனா இணக்கம்

2026ஆம் ஆண்டு இலவச பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (15) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காமலிருந்தால் இன்று (15) அந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக…

திருகோணமலை பெண்கள் கொலையில் 15 வயது சிறுமி கைது

திருகோணமலை மூதூரில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஓய்வுபெற்ற அரச ஊழியர்களான 68 மற்றும் 74 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு…

மூன்று பேர் பொல்லால் தாக்கியதில் ஒருவர் பலி

மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது மூன்று பேர் பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(14) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

அம்பலங்கொடையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

அம்பலங்கொடையின் இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (14) மாலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்று (14) மேல், சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில்…

மூதூரில் இரு சகோதரிகள் வெட்டிக் கொலை

மூதூர் – தஹாநகரில் 68 மற்றும் 74 வயதுடைய இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்ல – வெல்லவாய வீதியில் மண்சரிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எல்ல – வெல்லவாய வீதியின் 12ஆவது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் நேற்று (13) மண் சரிந்து விழுந்ததால் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்ப்டுள்ளது, குறித்த…