அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளுக்கு 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 35 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 48 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், அவுஸ்திரேலிய அணி சார்பில் மேட் ஷார்ட் 15 பந்துகளில் 19 ஓட்டங்களையும் ஆடம் ஜம்பா 21 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்றார்.
பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் ஹரீஸ் ரவுப் 5 விக்கெட்டுகளையும் ஷஹீன் அப்ரீடி 3 விக்கெட்களையும் நசீம் ஷா மற்றும் முஹம்மது ஹஸ்னைன் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சைம் அயூப் 71 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பெற்றார்.
மேலும், பாகிஸ்தான் அணி சார்பில் அப்துல்லா சபீக் ஆட்டமிழக்காமல் 69பந்துகளில் 64 ஓட்டங்களையும் பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 15 ஓட்டங்களையும் பெற்றார்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்துவீச்சில் ஆடம் ஜம்பா 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
இப் போட்டியின் நாயகனாக பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஹரீஸ் ரவுப் தெரிவாகினர்.
இரண்டு அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் இறுதி போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.