தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 207 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும் இந்திய அணி சார்பில் திலக் வர்மா 18 பந்துகளில் 33 ஓட்டங்களையும் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 17 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றார்.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் பந்துவீச்சில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், நக்பா பீட்டர் மற்றும் பேட்ரிக் க்ரூகர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 141 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 22 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும், தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஜெரால்ட் கோட்ஸி 11 பந்துகளில் 23 ஓட்டங்களையும் ரியான் ரிக்கல்டன் 11 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்களையும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப் போட்டியின் நாயகனாக இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய சஞ்சு சாம்சன் தெரிவாகினார்.

இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *