Month: October 2024

ஊழலற்ற நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசின் முழு ஆதரவு

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்…

டெங்கு ஒழிப்புக்கான நிபுணத்துவ அறிவை பகிர்ந்துகொள்ள கியூபா இணக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால…

அதி சொகுசு வாகன – பிடியாணை பிறப்பிப்பு

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவுக்கு மேல் வரி செலுத்தாமல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.…

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2023 (2024) மீள் பரிசீலனை பெறுபேறுகள் மற்றும் இடைநிறுத்தம் செய்து வைக்கப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை வெளியிட்டுள்ளது. உரிய…

பிரமுகர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் திருத்தம்

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்த முன்மொழிவுகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும்…

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள்

2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024 செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப்பகுதியில் 167 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் சட்டங்கள் 146 மற்றும் தனியாள் உறுப்பினர் சட்டங்கள் 21 ஆக 167 சட்டங்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தில்…

பாடசாலை பஸ்ஸில் தீ – 25 பேர் பலி!

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுதயா மற்றும் நொந்தபுரி மாகாணங்களுக்கு பாடசாலை சுற்றுலாவிற்காக சென்ற பஸ்ஸில்…

பஸ் கட்டணம் குறைப்பு

எரிபொருள் விலையை குறைத்ததால் பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு தமது சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது.…

லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு முனையம் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்

சிறுவர் துஷ்பிரயோகங்களை கடுமையாக எதிர்க்கிறோம்- வாழ்த்து செய்தியில் பிரதமர் சுட்டிக்காட்டு

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தை கொண்டாடும் இந்த சிறப்பான சந்தர்ப்பத்தில் இலங்கையின் பிரதமர் என்ற வகையிலும் மகளிர், சிறுவர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையிலும் எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று…